மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது
மன்னாரில்(Mannar) பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா பொதியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களால் நேற்று (19.11.2024) இரவு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 04 கிலோ 315 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பணிப்பில் மேற்கொண்ட நடவடிக்கையில் மேற்படி கேரளா கஞ்சா மற்றும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து உள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் கள்ளி கட்டைகாடு பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
மன்னார் பொலிஸாரின் விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
