யாழ். கோப்பாயில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவர் கைது (Photos)
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினராலே இன்று (23.10.2022) குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் 200 லீட்டர் கோடா, 60 லீட்டர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பும் தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்கள், கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் - உரும்பிராய் முருகன் வீதி
இந்நிலையில் கோப்பாய் - உரும்பிராய் முருகன் வீதியில் 6 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (23.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கைது சம்பத்தின் போது 6 கசிப்பு போத்தல்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை கோப்பாய்
பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
