போலியான குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் பொதுமக்கள் : அமைச்சர் கடும் விமர்சனம்
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் பொலிஸாரால் அப்பாவிகளும் கைது செய்யப்படுவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போலியான போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பொதுமக்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கை
போதைப்பொருள் வைத்திருந்தமைக்காக பொலிஸாரால் அண்மைக்காலமாக பெருமளவிலான நபர்களை கைது செய்துள்ளனர்.
ஆனால் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் போதைப்பொருள் அல்ல. "உண்மையான கைதுகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நடைபெற்றுள்ளன " என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களிடம் இருந்து "பனடோல்" தூள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன.பழிவாங்கும் நடவடிக்கையாக காவல்துறைக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுயுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை கண்காணிப்பதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் என அமைச்சர் விஜேதாச உறுதியளித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
