காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசை காட்டிய திருடர்கள்
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டின் கீழ் 22பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (04.08.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது திருடப்பட்ட இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
குறித்த தொழிற்சாலையில் இரும்பு திருடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |