தீபாவளியன்று விபத்து! கைது செய்யப்பட்ட மனோ கணேசனுக்கு பொலிஸ் பிணை
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தீபாவளிப் பண்டிகையன்று இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் பிணை
வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியக் குற்றச்சாட்டின் கீழ், மனோ கணேசன் எம்.பி, கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஓட்டிச் சென்ற 'லேண்ட் குரூஸர்' ரக வாகனம், மற்றுமொரு ஜீப் வண்டியின் மீது மோதுண்டுள்ளது.
இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வாகனத்தை ஓட்டிச் சென்ற மனோ கணேசன் எம்.பி கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
YOU MAY LIKE THIS VIDEO
மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! 59 நிமிடங்கள் முன்
துஸ்பிரயோக வழக்கு.... பிரித்தானிய நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்டிற்கு 10 வருடங்கள் சிறை News Lankasri
ஈரானியர்களுக்கு வழங்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகள்... அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் அதிகரிப்பு News Lankasri