யாழில் அட்டகாசம் செய்த வன்முறை கும்பல்: பொலிஸார் மீது குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறையில் ஈடுப்பட்ட கும்பல் மீது பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்றுமுன் தினம் (21) இடம்பெற்ற நிலையில், வீட்டிலுள்ள பொருட்கள் உட்பட வாகனமும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸாரின் அசமந்தப்போக்கு
இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பான சிசிடிவி காணொளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தும் பொலிஸார் அமைதியாக இருக்கிறார்கள்.
மேலும், பொலிஸாருக்கும் தாக்குதல் மேற்கொண்ட வன்முறை குழுக்களுக்கும் இடையில், தொடர்பு இருப்பதால் இதுவரையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாடியுள்ளனர்.



யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri