தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள்
டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் ஒன்றாக இணைந்து தோட்ட முகாமையாளர், பிரதேச செயலாளர், கட்டட ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு
ஸ்டொக்கம் தோட்டத்தை சேர்ந்த 65 குடும்பங்கள், வெடிப்பு மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளிட்ட காரணங்களால் வெளியேறுமாறு கிராமச் சேவர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய இடம்பெயர்ந்து இன்றுவரை ஸ்டொக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு எந்தவித தீர்வு பெற்றுக்கொடுக்காத நிலையில், மீண்டும் வீடுகளில் போய் குடியேறுமாறு தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முறைபாடு கையளிக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் அலட்சியம்
இது குறித்து முறைபாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் மழையால் தங்களது வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரச அதிகாரிகள் கூறிய அறிவுறுத்தல்களுக்கமைய இங்கு தங்கியிருக்கிறோம். தற்போது, முகாமில் இருந்து வெளியேறுமாறு கூறுகின்றார்கள்.

இதற்கிடையில், கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ளவர்கள், இரவு வேளையில் வருகை தந்து எவ்வித கருவிகளும் இன்றி காலால் தட்டிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டு, இந்த இடத்தில் மண்சரிவு ஏற்படாது என முகாமையாளருக்கு தெரிவித்தார்கள்.
தோட்ட முகாமையாளர் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரம் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் மற்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச அதிகாரிகள் நிவாரண உதவிகளை கையாளும் நிலையில், தோட்ட மக்களை மாத்திரம ஏன் தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார்கள்.
நாங்கள் இலங்கை பிரஜை இல்லையா? நாங்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லையா? ஏன் எங்களுக்கு மாத்திரம் வேறொரு சட்டம். எனவே எங்களுடைய முழு பொறுப்பையும் கிராமச் சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஏற்க வேண்டும். ஏனைய மக்களுக்கு பொறுப்பு கூறுவது போன்று எங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan