ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாளை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேரரை நாளை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
களுத்துறை, தினியாவல பகுதியில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) அதிகாரிகள் குழுவினரால் ஞானசார தேரர் நேற்று (03) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.
மேலும், தேரர் வெளிநாடு செல்வதை தடுக்கும் பயணத்தடையையும் நீதிமன்றம் பிறப்பித்தது.
தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் நேற்று (03) களுத்துறை, தீனியாவள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து ஞானசார தேரர் நேற்று இரவு கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை அண்மையில் உயர்நீதிமன்றம் இரத்துச்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan