கடலட்டைகளை கடத்த முயற்சித்த மூவர் கைது
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அனுப்பப்படவிருந்த பதப்படுத்திய கடலட்டைகளுடன் மூவர் தமிழக கடலோர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சட்டவிரோதமாக அனுப்பப்படவிருந்த ஒரு தொன் கடலட்டைகளை பறிமுதல் செய்த தமிழக பொலிஸார் கடற்தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் கடல் கடலட்டைகளை அழித்து வரும் இனமாக வகைப்படுத்தியுள்ளது.
சீனா, இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் வேறு சில தூர கிழக்கு நாடுகளில் கடலட்டை ஒரு உணவு மற்றும் மருத்துவத்துறை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
30 லட்சத்திற்கும் மேலான பெறுமதி
பொலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒரு மெட்ரிக் தொன் கடலட்டையின் மதிப்பு 30 இலட்சம் ரூபாவாகும்.எனினும் இது இலங்கை அல்லது சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டால் அதன் மதிப்பு இந்தியாவின் மதிப்பை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ராமநாதபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 10 வகையான
கடலட்டைகள் இருப்பதாகவும், அதில் ஆறு வகைகள் ஒரு லட்சம் முட்டையிடும் திறன்
கொண்டவை என்றும் அகில இந்திய கடற்தொழிலாளர் பேரவை தலைவர் ஆம்ஸ்ட்ராங்
பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
