விடுதலைப் புலிகளின் சின்னங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த இளைஞர் கைது!
தமிழீழ விடுதலைப்புலிகள், நாம் தமிழர் கட்சி, ஆவா குழுவின் சின்னங்கள் மற்றும் வாள் என்பவற்றை தொலைபேசியில் வைத்திருந்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - உதயநகர் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயல் ஒன்றுக்கான இரும்பு வாள் ஒன்றை மறைத்த வைத்திருக்கின்றார் என்ற தகவல் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்தமையினை அடுத்து குறித்த இளைஞர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து வாள் ஒன்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரது கையடக்க தொலைபேசி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது விடுதலைப்புலிகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள் இருப்பது விசேட அதிரடிப்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வாள்களுடன் இளைஞர் ஒருவரின் புகைப்படமும் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
