மட்டக்களப்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இருவர் கைது
மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், 4,760 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமையினாலேயே நேற்று சனிக்கிழமை (03.02.2024) கல்லடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று காலை 10 மணியளவில் கல்லடி பகுதியிலுள்ள வீதி ஒன்றில் சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
மீடகப்பட்ட பொருட்கள்
அதனைத் தொடர்ந்து, அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வியாபாரத்துக்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துக் கொண்டு வந்தவரையும் அதனை வாங்க சென்ற இருவரையும் அங்கிருந்த விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

அதனையடுத்து, அவர்களிடமிருந்து 4,760 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டர்சைக்கிள் ஒன்று மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி பட்டிப்பளை பிரதேச செயலகத்தில்
கடமையாற்றிவரும் கல்லடிபகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan