ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மோதல்: பணிப்பெண்கள் மீதும் தாக்குதல்
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களை தாக்கிய சவூதி நாட்டவர் செய்யப்பட்டுள்ளார்.
சவூதி நாட்டவரான 28 வயதுடைய சந்தேகநபரே இன்று (26) கைது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து குறித்த விமானத்தில் மலேசியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
இன்று காலை 06.32 மணிக்கு சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-266 வருகை தந்துள்ளார்.

விமானத்தில் மோதல்
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாராகிக்கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் தங்கள் இருக்கை பெல்ட்களைக் கட்டிக்கொண்டு தங்கள் இருக்கைகளில் அமர வேண்டியது அவசியமாகும்.

இருப்பினும், குறித்த நபர் விதியை மீறி கழிப்பறைக்குச் செல்ல முயன்றபோது இந்த மோதல் ஏற்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விமான பணியாளர்கள் விமானிக்கு தெரிவித்ததை தொடர்ந்து, விமானம் தரையிறங்கிய பிறகு விமானத்திற்கு அருகில் வந்த பொலிஸ் அதிகாரிகள் சவூதி அரேபிய நாட்டவரைக் கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri