மன்னார் கடற்பரப்பில் தொழிலதிபர் உட்பட நான்கு பேர் கைது
இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் தப்பிச் சென்ற இலங்கையின் தொழிலதிபர் உட்பட நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இந்த என்ற தொழிலதிபர், முன்னதாக, தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர்ப்பதற்காக, படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில், அவர் தனது குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விசாரணைகள்
இந்த நிலையில், இலங்கையில் தமக்கு எதிரான சட்ட விசாரணை முடிவடைந்து, குற்றச்சாட்டுகளில் இருந்து தாம் விடுவிக்கப்படவிருந்த நிலையில், அவர் இலங்கைக்குத் திரும்ப முடிவு செய்து, படகு மூலம் மன்னாருக்கு திரும்பும்போதே இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த முயற்சியின்போது குறித்த தொழிலதிபருடன் சென்ற மேலும் மூன்று பேரை அடையாளம் காண்பதற்காக, விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.