அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் பொலிஸாரால் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று(28.04.2024) பேருந்து மறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இதன்போது 45 லிட்டர் கசிப்புடன் சந்தேக நபர் இருவரை கைது செய்ய முற்பட்ட வேளை ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் அவரையும் பொலிஸார் துரத்தி பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் பயண பொதியில் கசிப்பினை பொதி செய்து எடுத்துச் சென்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் விசுவமடு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லவிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




