பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீட்டில் சிக்கிய 49 வயதான நபர்
மட்டக்களப்பு - காத்தான்குடியில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் வர்த்தகரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலை காத்தான்குடி அல் அமீன் வீதியிலுள்ள சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 86.356 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் சிக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 49 வயதானவர் எனவும், பிரதேசத்தில் வாகனம் திருத்தும் கராச் ஒன்றை நடத்தி வரும் நிலையில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri