அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்து முன்னிலைபடுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் வழக்கு இன்று (22) விசாரணைக்கு வந்தபோது பிடியாணை பிறப்பித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சட்டத்துறை தலைவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர், டிசம்பர் 9ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.