பல கோடி ரூபா மோசடி: இலங்கையருக்கு பிடியாணை உத்தரவு
"ஒன்மாக்ஸ் டிடி." சட்டவிரோத பிரமிட் திட்ட நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் பல கோடி ரூபா பெறுமதியான 16 காணிகளை கொள்வனவு செய்துள்ளமை கண்டுடிபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று (07) கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இதனை தெரிவித்துள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேற தடை
குறித்த காணிகளை ஓப்பநாயக்க பிரதேசத்தில் வைத்தியர் ஒருவருக்கு விற்பனை செய்ததோடு, 12 காணிகளை ஒரே நாளில் கொள்வனவு செய்த வைத்தியரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாரின் உண்மைகளை பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேகநபருக்கு பிடியாணை உத்தரவினை பிறப்பித்ததுடன், வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடைசெய்து வெளிநாட்டுப் பயணத்தடையையும் பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
