முடிந்தால் டிரான் அலஸை கைது செய்யுங்கள்! அரசாங்கத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் டிரான் அலஸை முடிந்தால் கைது செய்யுமாறு அவர்களுக்கு சவால் விடுப்பதாக கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் அனைத்து அரசியல்வாதிகளுடனும் ஒப்பந்த அரசியலிலேயே ஈடுபட்டு வருகிறது.
அண்மையில் அமைச்சர் லால் காந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறந்த சான்றிதழை வழங்கியமையிலிருந்தே இது தெளிவாகத் தெரிகிறது.
ரணிலுக்கு புகழாரம்
ஒருபுறம் லால் காந்த ரணிலுக்கு புகழாரம் சூட்ட, மறுபுறம் சிலர் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையோ அழைக்கின்றனர்.
இவ்வாறு வெளிப்படையாக முரண்பாடுகளைக் கொண்ட கட்சியாக தேசிய மக்கள் சக்தி காணப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக குரலெழுப்புபவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி
அந்த வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆனால் தாம் ஆட்சியமைத்தால் அர்ஜூன் மகேந்திரனின் காதுகளைப் பிடித்து இழுத்து வருவோம் எனக் கூடிய தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் எதுவுமே பேசுவதில்லை.
இன்று பாரியளவில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் சகல துறைகளிலும் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களை விரட்டியடிக்கின்றது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
