வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டோர் கைது (Photos)
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றுமுன் தினம் (28.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏழாலை, கூளாவடி மற்றும் தாவடி பகுதிகளைச் சேர்ந்த 22, 23 மற்றும் 25 வயதுடையவர்களே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் 30 மில்லிகிராம் ஹெரோயினும், மற்றையவரிடம் 40 மில்லிகிராம் ஹெரோயினும் இந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றுமுன் தினம் (28.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெண்ணின் வீட்டை முற்றுகையிட்ட போது 20 கசிப்பு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பவன்
கிளிநொச்சி
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 40 கிலோகிராம் மதிக்கத்தக்க 20 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
செய்தி: யது
யாழ்பாணம்
யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
56,000 ரூபாய் பெறுமதியுடைய 1.56 கிராம் ஹெரோயின் போதைப்பொருளினை தனது உடமையில் வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: தீபன்


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri
