அழகுராணி போட்டியில் பாம்புடன் நடனமாடிய பெண்ணை கைது செய்யுமாறு உத்தரவு
கொழும்பில் நடைபெற்ற சிங்கள–தமிழ் புத்தாண்டு நிகழ்வு ஒன்றில் பாம்புடன் நடனமாடியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண்ணை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் டி.ஜே. பிரேமரத்னவினால் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

நெத்மி ஹிரண்யா என்ற யுவதியே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இலங்கையில் பாதுகாக்கப்படும் விலங்கினங்களில் ஒன்றான மலைப் பாம்பை கழுத்தில் சுற்றி கொண்டு நிகழ்வில் நடனமாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாக்கப்படும் உயிரினத்தை தவறான முறையில் கையாள்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை வனவிலங்கு திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலம் பெற முயற்சி செய்தபோதும், அவர் அதற்கு இணங்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு அழகுராணி போட்டி நிகழ்ச்சியின் போது இடம்பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பைத்தான் பாம்பு பாதுகாக்கப்படும் விலங்கினங்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினம் என்பதால், இந்தச் செயல் குற்றமாகும் என வலியுறுத்தப்பட்டது.
சம்பவத்தின் தன்மையை கருத்தில் கொண்டு, சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam