பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இளம் பெண் கைது! சிக்கிய கோடிக்கணக்கான பொருள்
ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பொரலெஸ்கமுவ, நிர்மல மாவத்தை பகுதியில் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு
பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண் வீடமைப்புத் தொகுதி ஒன்றில் தற்காலிகமாக வீடொன்றைப் பெற்றுத் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 17 கிலோ கிராம் ஹேஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அந்த போதைப்பொருளின் பெறுமதி 1 கோடியே 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபர் பொரலெஸ்கமுவவில் வசிக்கும் 31 வயதுடையவர் எனவும், அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவருக்கு எதிராக ஏற்கனவே 4 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam