சட்ட விரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது
கிளிநொச்சி(Kilinochchi) சுண்டிக்குளம் - சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று ( 02.05.2024)கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
[1D6UTTO
திடீர் சோதனை
கடற்படை முகாமிற்கு அருகில் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் தரித்து நின்ற படகை சுண்டிக்குளம் கடற்படையினர் திடீர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது படகு அனுமதி பத்திரம் இன்றி கடற்றொழிலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் சுண்டிக்குளம் கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
