வவுனியாவில் கணவன் வெட்டிக்கொலை : மனைவி எடுத்த தவறான முடிவு
வவுனியா நெடுங்கேணி் கிரிசுட்டான் பகுதியிலுள்ள வீடோன்றில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விஷம் அருந்தி தற்கொலை
இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரனைகளின் பின்னர் உடற்கூற்றி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
