ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் ஆட்கடத்தல் மர்ம கும்பல்!
மலேசியாவுக்குள் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் ஆட்கடத்தல் தரகர்களாக செயல்பட்ட மியான்மர் நாட்டவர் உள்ளிட்ட 4 பேரை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, Kampung Cherang Hangus பகுதியில் மலேசிய பொலிஸார் நடத்திய சோதனையில் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 மியான்மர் நாட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என Pasir Mas மாவட்ட பொலிஸ் தலைமை அதிகாரி நசர்யூதின் நசிர் தெரிவித்துள்ளார்.
இந்த 24 பேரில் 6 பேர் பெண்கள், 18 பேர் ஆண்களாவர். மியான்மர், லாவோஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள ஏழ்மையான மக்களை குறிவைக்கும் தரகர்கள் அங்கிருந்து பல்வேறு வழிகளில் மலேசியாவுக்குள் ஆட்களை கடத்தி வந்து பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
இவ்வாறு பணிக்கு அமர்த்தப்படுபவர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாகும் நிலையும்
முறையான ஆவணங்களின்றி மலேசிய அதிகாரிகளிடம் சிக்கும் நிலையும் உள்ளமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 10 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan