நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள்
பொலன்னறுவை - ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் வாளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு மைக்ரோ பிஸ்டல், இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
3 MIC இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்காக சான்றுப் பொருட்களுடன் ஹிங்குறாகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஹிங்குறாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (15.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்ட போது குறித்த படகில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படகில் இருந்த நபரை கடற்படையினர் கைது செய்ததோடு படகினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா , படகு மற்றும் கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட
நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
