நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கை! இருவர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெலிகொம் வீதியில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலை காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபரும் உழவு இயந்திரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரிய நீலாவணை
அனுமதிப்பத்திரமின்றி அதிகளவான மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்பனை செய்த சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (07.05.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
அதிகளவான பியர் மற்றும் மதுபான போத்தல்கள் சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி விற்பனையில் ஈடுபடுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில், பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டி.டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரினால் கைது
இதன் போது சுமார் 37 வயது மதிக்கத்தக்க துறை நீலாவணை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ஒரு தொகுதி ஆகியன சூட்சுமமாக மறைத்து விற்பனையில் ஈடுபட்ட நிலையில் மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதான நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை.
அளவிற்கு அதிமான மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் : பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம், மண்டைதீவு கடற்பரப்பில் இன்று காலை பெருந்தொகையான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
85 கிலோ கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி -தீபன்