மனைவியை தாக்கிய கணவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை பிரதேசத்தில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது மனைவியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீடியோக்கள்
திருகோணமலை, கிளிவெட்டி ஆசாத் நகர் பகுதியில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் கைகலப்பின் போது பிடிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

குறித்த சந்தரப்பத்தில் கணவர் மனைவியை தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியானதைடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கிளிவெட்டி ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த 32 வயதான முகம்மத் அஸ்லம் என்பவர் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் உரிமை

இந்நிலையில் குறித்த பெண் புனித இஸ்லாத்தை தழுவிய நிலையில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றாமையினால் இதனால் கோபம் கொண்டு மனைவியை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இருந்த போதிலும் பெண்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கணவராக
இருந்தாலும் பெண் ஒருவரை இவ்வாறான விதத்தில் தாக்குவது பெண் சமத்துவத்தை
இல்லாதொழிக்கும் செயல் எனவும் குறித்த செயற்பாட்டை வண்மையாக கண்டிப்பதாகவும்
திருகோணமலை பெண்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri