மறைந்த ஆயரின் பூதவுடலை செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு
மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆயரின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
மாலை 3 மணியளவில் ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியூடாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலை சந்தியூடாக மன்னார் பொது விளையாட்டு மைதான சந்தியை சென்றடையும்.
அங்கிருந்து பெரிய கடை வழியாக மன்னார் நகரப்பகுதியில் வந்தடைந்து அங்கிருந்து மன்னார் நகரப்பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டம் வழியாக சென்று மன்னார் புனித செபஸ்டியார் பேராலய வீதியூடாக டெலிகொம் சந்தியை சென்றடையும்.
அங்கிருந்து ஆயரின் திருவுடல் தாங்கிய ஊர்தி செபஸ்தியார் பேராலயத்தினை சென்றடயும்.
பின்னர் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்hக பூதவுடல் வைக்கப்படும். நாளை திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை அஞ்சலிங்கு வைக்கப்பட்டு மாலை 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam