எரிபொருள் விநியோகத்தில் இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும்: மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர
பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, ஜால்மரை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினை இன்றைய தினம்(04) இல்லத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சந்திப்பு

குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ் ஆயர் கருத்து தெரிவித்த போது, தற்போது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
அதனால் இயன்ற அளவு அரசு அதிபரோடு இணைந்து அவரின் கீழ் எரிபொருளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்புக்குரிய ஒழுங்கமைப்பினை மேற்கொண்டுள்ளோம் என யாழ் கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
வடபகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி எதுவும் எமக்கு கிடைக்கவில்லை இருந்தும் வறிய குடும்பங்களுக்கான உதவிகள் செய்து கொண்டிருக்கின்றோம்.
போக்குவரத்து ஸ்தம்பிதம்

எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு பயணிப்பது கடினமாகவுள்ளது.
முக்கியமாக சுகாதார பிரிவினருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பினையும் கொடுக்க தயாராக இருக்கின்றோம்.
அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுகாதார பணியினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இராணுவம் ஒத்துழைப்பினை வழங்கும்” என யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam