சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை இராணுவத்தினால் வெரஹெர கிளையில் மேற்கொள்ளப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் நடவடிக்கைகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி விசேட பாதுகாப்பு அமைப்பின் ஊடாக இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் செயற்பாடுகள் இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது.
மீளாய்வு செய்யப்படும் ஒப்பந்தம்
மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குதல் என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழியாக, அச்சிடும் செயன்முறையை இலங்கை இராணுவத்திற்கு மாற்ற அமைச்சரவை 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி தீர்மானித்தது.
முன்னதாக ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியதாகவும், அந்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் எனவும் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
