மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்! இராணுவப் பேச்சாளர் விடுத்துள்ள கோரிக்கை
நாடளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கி சூறையாடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சூறையாடப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த தரப்பினர் வன்முறையாக செயற்படக் கூடும்.
எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொல்துவ சந்தியில் துப்பாக்கி திருட்டு
நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் முன்னெடுத்திருந்ததுடன் துப்பாக்கியையும் களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே ரீ 56 ரக துப்பாக்கி களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
துப்பாக்கியுடன் அதற்கான 60 தோட்டாக்களும் களவாடப்பட்டுள்ளன.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri