சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை மறைத்து வைத்திருந்த இராணுவ வீரர் கைது
வவுனியாவில் பணி புரியும் இராணுவ வீரர் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்று (23) இராணுவத்தினர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அங்குனுகொல பலஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ வீரர் ஒருவரின் பரவகும்புக பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தனியார் வீட்டினை சோதனை செய்த போது சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 235 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, குறித்த வீட்டில் வசித்து வந்த இராணுவ வீரரின் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கணவனான இராணுவ வீரர் வவுனியாவில் பணியாற்றிய நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் அங்குனுகொல பலஸ்ஸ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
