குழு மோதலில் முன்னாள் இராணுவச் சிப்பாய் கழுத்தறுத்துப் படுகொலை!
குழு மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை - படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த குடும்பஸ்தர் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய அஷங்க பண்டார என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் இராணுவத்தில் கடமையாற்றினார் என்றும், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பில் நால்வரைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.