தவறான முடிவினால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
பனாகொடை இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே சுட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை பனாகொடை இராணுவ முகாமின் பீரங்கிப்படையணி சிப்பாய்களின் விடுதி அருகே இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர், மாத்தளை, நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத, 28 வயதுடைய இந்திக சதுரங்க அத்தநாயக்க எனும் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ துப்பாக்கியை கொண்டு நாடியின் கீழாக வைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
துப்பாக்கியின் தோட்டா நாடிப்பிரதேசம் வழியாக ஊடுருவி, மண்டையோட்டில் பாரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு காயமடைந்த நிலையில் காணப்பட்ட சிப்பாய் பனாகொட இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணத்தை தழுவியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பனாகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



