போதைப்பொருளுடன் சிக்கிய இராணுவ சிப்பாய்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தளபதி அறிவுறுத்தல்
போதைப்பொருளுடன் சிக்கிய இராணுவ சிப்பாய்க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இராணுவ வாகனம் ஒன்றில் 45 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திச் சென்றபோது ஹொரன பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மட்டும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற சிப்பாய் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இராணுவத்தின் நிர்வாக நோக்கங்களுக்காகக் குத்தகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் இந்த வாகனம் இயந்திரவியல் காலாட்படை பிரிவுக்குச் சொந்தமானதென்பதுடன் நிரந்தர வாகன ஓட்டுநர் விடுமுறையில் சென்றிருந்தமையால் அவருக்கு மாறாக நியமிக்கப்பட்ட சாரதியால் இந்த வாகனம் செலுத்தப்பட்டுள்ளதெனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு பதவி நிலை அணியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேற்படி இராணுவ சிப்பாய் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட விதிகளின் படி அவருக்கு எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸ் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 15 மணி நேரம் முன்
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam