கிளிநொச்சியில் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு வழங்கி வைப்பு
கிளிநொச்சி - கண்டாவளை, புளியம்பொக்கணை பகுதியில் தற்காலிக வீடொன்றில் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கு இன்று (25) இராணுவத்தினரால் நிரந்தர வீடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சிறு பிள்ளைகளுடன் தற்காலிக வீட்டில் வசித்து வந்த குறித்த குடும்பத்துக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
இதன்போது, கிளிநொச்சிக்கு இன்று பகல் விஜயம் செய்த இராணுவ தளபதிளயால் இந்த வீடு உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri