மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் ஆற்றினுள் தவறி வீழ்ந்து ஒருவர் பலி
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் வைத்து இதனை நிறுத்த முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவேரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளின் தந்தை
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டுபிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த நபர் நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் ஒன்றி ல்பழுகாமத்தில் இருந்து பெரிய போரதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது குறித்த நபர் தவறி மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து தவறி ஆற்றினுள் விழுந்துள்ளார்.

இதைனையடுத்து பொலிஸார் பொதுமக்கள் உதவியுடன், மோட்டர் சைக்கிளையும் உயிரிழந்த நபரையும் மீட்டுள்ளனர்.
மேலும், அவருடன் பிரயாணித்த இரு நண்பர்களையும் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam