முல்லைத்தீவில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த காணி விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி, பொதுமக்களின் தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
59 ஆவது படைப்பிரிவினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
தனியார் காணியின் உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல்
மேலும் இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தனியார் காணியின் உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த காணி அதன் சட்டபூர்வ உரிமையாளரிடம் முறையாகக் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காணி விடுவிப்பு நடவடிக்கையானது, பொதுமக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26