மானிப்பாயில் மின்சாரக் கட்டணம் செலுத்தாமல் வெளியேறிய இராணுவம்
யாழ்ப்பாணம் - மானிப்பாய் கிறீன் மருத்துவமனையின் ஒரு பகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாமின் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்கட்டண நிலுவையை செலுத்தாமல் இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் ஆயரான டானியல் தியாகராஜாவின் காலத்தில் இருந்து, மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் தமது முகாமை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் அந்த முகாம் இராணுவத்தால் அப்புறப்படுத்தப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்சார நிலுவையை வைத்துவிட்டு அறிவிப்பின்றி சென்றுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
மின்சார நிலுவை
இது தொடர்பில் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் தொடர்புகொண்டு கேட்ட போது,
“சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தமது முகாமை இயக்கி வந்தனர்.
அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |