யாழில் ஒமிக்ரோன் தொற்றினை கட்டுப்படுத்த களமிறங்கியது இராணுவம் (Video)
யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால் பொதுமக்களுக்கு மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் யாழ் கோட்டைப் பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசியைப்
பெறுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில், இராணுவத்தினரால் குறித்த தடுப்பூசி
வழங்கும் திட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam