இலங்கை புலனாய்வுத்துறை சிஐஏ கட்டுப்பாட்டில்! அச்சத்தில் இலங்கை இராணுவம் (Video)
அமெரிக்காவின் அச்சுறுத்தலால், இலங்கை படையினர் தொடர் நெருக்கடிக்குள் உள்ளாகிகொண்டிருப்பதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,“சி.ஐ.ஏ அதிகாரியின் வரவும் தொடர்ச்சியாக அமெரிக்க அதிகாரிகளின் வரவும் இலங்கை மீதான தொடர் அழுத்தங்களும் இலங்கை படையினரின் தொடர் நெருக்கடி நிலையை வெளிப்படுத்துகின்றது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றை அவர்களின் கருவியாக பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக இலங்கை மீது இறக்கி உள்ளனர்.
இலங்கையரின் நெருக்கடி தீரவில்லை மேலும் மேலும் நெருக்கடிக்குள் சென்றுகொண்டிருக்கிறது என விமல் வீரவன்ச கூறியிருந்தார்.
இதனடிப்படையில் அமெரிக்காவின் தொடர் அழுத்தங்களால் இலங்கை படையினர் முற்றுமுழுதாக பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர் என்பது உறுதியாகின்றது.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |