இராணுவத்துடன் அதிரடியாக களத்தில் குதித்த ரணில்! அரசியல் ஆய்வாளர் தகவல்
தற்போது கொழும்பு நகரம் முழுவதும் முப்படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர் என இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன் இன்று பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டமை பிரதமரையும் பதவி விலகக் கோரி தான் இடம்பெற்றது. எனினும் அவர் உடனடியாக பதவியை கையில் எடுத்துக் கொண்டு நாட்டில் அவசரகாலச் சட்டத்தையும் கொண்டு வந்து, மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
தற்போது கொழும்பு நகரம் முழுவதும் முப்படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். விமானப் படை விமானங்கள் பல தாழப்பறந்து வேவுபார்க்கின்றன. இவையெல்லாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் விடங்களாகவே நாம் பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
