முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு அண்மையாக இராணுவ காவலரண்(Photos)
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 13 ஆம் நினைவேந்தல் நிகழ்வு நாள் அண்மித்துவரும் நிலையில், இராணுவம், புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக முள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அண்மைய நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக காவலரண் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினருடன் இணைந்து புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, இன்று காலை உயர் பொலிஸ் குழு ஒன்றும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று பார்வையிட்டுள்ளது.
நினைவுத்தூபிக்கு அண்மையாகவுள்ள வீடுகளுக்குச் சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

நினைவு நிகழ்வு நடக்குமா? என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது? போன்ற
கேள்விகளை நினைவுத்தூபிக்கு அயலில் உள்ள மக்களிடம் கேட்டு இராணுவ
புலனாய்வாளர்கள் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri