வவுனியா நகரப்பகுதியில் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு
வவுனியா நகரப் பகுதியின் முக்கிய பல இடங்களில் இராணுவத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடு முழுவதும் 41 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நாளை காலை 4 மணியுடன் தளர்த்தப்பட உள்ளது.
இந்நிலையில் வன்னி பாதுகாப்புப்படை தலைமையக தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினர் வவுனியா நகரின் பொது இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியின் பேருந்து தரிப்பிடம், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகர சபை பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் விசிறி குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
