லட்சக்கணக்கில் குவிக்கப்பட்ட இராணுவம் : எல்லையில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் (Video)
உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இதற்கிடையில், கடந்த மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 90 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகின் தொகுப்பு,