சுயமாக மூடப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் ஒரு சில பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் சுயமாகவே வர்த்தக நிலையங்களை மூடியுள்ளமையினால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஆனால் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வேறு பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு செல்கின்றார்கள்.
சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியமாகும்.
சிறு வியாபார நடவடிக்கைகளின் ஊடாக தங்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்லும் மக்கள் குறித்தும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலில் அடிப்படையில் பொது மக்கள் செயற்பட வேண்டும்.
வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும். எனினும் தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைக்காக வெளியில் செல்லும் போது ஒருவர் என்ற அறிவுறுத்தல் தாக்கம் செலுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
