இராணுவ பேருந்துடன் லொறி மோதி விபத்து: 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில்..!
இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்றுடன் லொறியொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பின் அருகே கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவலைப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இருவர் தீவிர சிகிச்சையில்
நிட்டம்புவை-கிரிந்திவெல வீதியின் மணமால வளைவில் இராணுவத்தினரை ஏற்றிக் கொண்டு பயணித்த பேருந்து ஒன்றுடன் லொறியொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் காரணமாக பேருந்து சாரதி, அதில் பயணித்த இராணுவத்தினர் 21 பேர் ஆகியோர் காயமடைந்து வதுபிட்டிவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்து சாரதியும் இன்னொருவரும் மட்டும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனையோர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
