முல்லைத்தீவில் கும்பிடும் போது கொடூரமாக தாக்கிய இராணுவம்! ராஜரூபன் பகீர்த் தகவல்

Mullaithivu
By Independent Writer Jan 29, 2021 08:48 AM GMT
Report

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரி கிராமத்தைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .

குறித்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடைகளின் உரிமையாளர் அழகராஜா ராஜரூபன்,

வழமைபோன்று நேற்றையதினம்(25) பசுமாடுகளை மேய்ச்சல் முடிந்து பட்டிக்கு அடைப்பதற்காக கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள வீதியால் கலைத்துச் சென்ற வேளை முன்னால் சென்று கொண்டிருந்த மாடுகள் கேப்பாபுலவு கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் வேலியின் உட்புறத்தில் உள்ள புற்களை வேலிக்குள்ளால் தலையை நுழைத்து மேய்ந்ததோடு தொய்ந்திருந்த வேலியை அறுத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது .

பின்னால் மாடுகளை மேய்த்துக்கொண்டு வீதியால் வந்து கொண்டிருந்த என்னை அழைத்த இராணுவம் உனது மாடுகளா இவை எனக் கேட்டார்கள் ? நான் எனது மாடுகள்தான் எனக் கூறியதும் வேலியை வெட்டி உள்ளே மாடுகளை விடுகின்றாயா ?? எனக் கேட்டு என்னைத் தாக்கியதுடன் எனது கழுத்தைப் பிடித்து நெரித்துத் திருகியதுடன் கையில் வைத்திருந்த பொல்லுகளால் என்னைத் தாக்கினார்கள்.

பின்னர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்து அங்கிருந்து வந்த வாகனத்தில் இராணுவத்தினர் 20 பேருக்கு மேற்பட்டோர் என்னை வலுக்கட்டாயமாக எனது ஆணுறுப்பில் பிடித்து வாகனத்துக்குள் தூக்கி எறிந்தனர்.

பின்னர் இராணுவ பொலிஸார் சிலரும், பொலிஸாரும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுவாக்கு மூலம் பெற்றுக்கொண்டதோடு நான் வேலி கம்பிகளை வெட்டியே மாடுகளை உள்ளே விட்டு மேய்த்ததாகவும், இனிமேல் மாடுகளை உள்ளே விட்டால் மாடுகளையும் வேலிக்கு அண்மையாக நீ வந்ததால் உன்னையும் சுட்டுக் கொன்றுவிட்டு அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்ததாகச் சொல்லுவோம் எனவும் தெரிவித்தனர்.

ஊடகத்துக்கு யார் இந்த செய்தியைச் சொன்னது ?? ஊடகத்துக்கு எல்லாம் சொல்லக்கூடாது எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்துவிட்டு இரவு என்னை விடுவித்தனர்.

இன்றுவரை இராணுவ முகாமுக்குள் சென்ற மாடுகள் பல இன்னும் வெளியில் விடப்படவில்லை. மாடுகள் உள்ளே நிற்பதால் கன்றுகள் இராணுவ முகாமை சுற்றியே கத்திக்கொண்டு நிற்கின்றன எனக்கு இராணுவ முகாமுக்கு அண்மையாகச் சென்று மீதமுள்ள மாடுகளை மேய்க்கப் பயமாக இருக்கிறது .

அவர்கள் சொன்னது போலவே சுட்டுக்கொன்று விட்டு கேஸை மாற்றுவார்களோ என்றே பயப்படுகின்றேன்.

நான் வேலியை வெட்டி மாடுகளை உள்ளே விட்டு மேய்த்தேன் என்பது பொய் வீதியின் அருகே அங்கங்கே காவலரண்கள்அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கே இருக்கும் இராணுவத்தை மீறி என்னால் எப்படி வேலியை வெட்டி உள்ளே விடமுடியும் ? இராணுவம் முகாமை சுற்றி சிசிரிவி கமெராக்கள்பொருத்தியுள்ளது.

அதை வேண்டுமானால் அவர்கள் சோதித்து உண்மையை அறியட்டும். இராணுவம் என்னைத் தாக்கியதில் கழுத்து பகுதியிலும், கை பகுதியிலும் நகங்களால் கீறப்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு பல இடங்களில் கண்டல் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட நான் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாத நிலையில் மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் அவற்றைப் பராமரித்து வரும் நிலையில் இராணுவம் இவ்வாறு என்னைத் தாக்கியதோடு இராணுவ முகாமுக்கு உள்ளே சென்ற மாடுகளை இன்னும் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளனர்.

எனக்கு இராணுவத்தினரிடமிருந்து இனி வரும் நாட்களில் பாதுகாப்பு அச்சம் இருப்பதோடு இராணுவம் வைத்துள்ள மாடுகளையும் வெளியில் விடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு கிராமத்தில் ஒரு பகுதி ஏற்கனவே மக்களின் தொடர் போராட்டம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் அடங்கிய கிராமத்தின் மறுபகுதி பூரணமாக இராணுவத்தின் பிடியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US