குச்சவெளி எரிபொருள் நிலையத்தில் நபரொருவரை தாக்கிய இராணுவத்தினர் (video)
திருகோணமலை - குச்சவெளி எரிபொருள் நிலையத்தில் கடமையிலிருந்த இராணுவத்தினர் நபரொருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி- காசிம் நகர் மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த முகம்மட் றவ்பீ (42) வயதுடையவருக்கே இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பெட்ரோல் எரிபொருள் நிலையத்தில் அடித்துவிட்டு சக நண்பரிடம் திறப்பை வாங்குவதற்காக மீண்டும் எரிபொருள் நிலையத்திற்குச் சென்றபோது தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட நபர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
அங்கு கடமையிலிருந்த பொலிஸார் தன்னை தாக்கியதாகத் தெரிந்திருந்தும் தாக்குதல் நடத்தியதைத் தெரியாததைப் போன்று இருந்ததாகவும் அவர் கூறினார்.
தான் இரண்டாவது தடவையாக பெட்ரோல் நிரப்புவதற்குச் சென்றிருந்தாலும் கூட என்னை பொலிஸ் நிலையத்தில் என் தவற்றைச் சுட்டிக்காட்டி ஒப்படைத்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இருந்தும் தன்னை தாக்கியதுடன் அணிந்திருந்த ஆடையை கிழித்து இராணுவத்தினரின் அணிந்திருந்த சப்பாத்தினால் உதைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஊடகங்கள் இவ்வாறான செயற்பாட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபர் மேலும் கூறினார்.

புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam