இராணுவ பீரங்கி படையணியின் முன்னாள் வீரர் கைது- செய்திகளின் தொகுப்பு
இலங்கை இராணுவத்தின் முன்னாள் பீரங்கி படைப்பிரிவு வீரர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய பிரதேசத்தில் வசித்த வைத்தியரை கொன்று, தற்போது டுபாயில்
மறைந்திருக்கும் பெரும் போதைப்பொருள் வியாபாரியான கரந்தெனிய சுத்தாவிற்காக
ஹெரோயின் போதைப்பொருளை அனுராதபுரத்தில் விநியோகித்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது ஹெரோயினை வாங்க வந்த ஐவர் “ஈஸி கேஷ்” முறையில் பெற்ற 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் ஹெரோயின் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் 25 முதல் 40 வயதுடைய தலாவ, தேவனம்பியதிஸ்ஸபுர, சாலியபுர ஆகிய இடங்களை சேர்ந்தவர்களென கூறப்படுகிறது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan